மாதவி சிவலீலன். லண்டன் UB6 0DZ: ஸ்லீ பப்ளிக்கேஷன்ஸ், 607 Avenue West, Greenford, Middlesex 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2017. (சென்னை 600077: மணி ஓப்செட்).
xvi, 104 பக்கம், விலை: ஸ்டேர்லிங் பவுண் 6.00, அளவு: 21.5×14 சமீ.
ஈழத்துத் தமிழ்க் கவிஞர் காரை செ.சுந்தரம்பிள்ளை-இந்திராவதி தம்பதியினரின் மகளான மாதவி சிவலீலனின் கவிதைகளின் தொகுப்பு இது. வாழ்க்கைத் தேடலின் புரிதல்கள், ஆச்சரியங்கள், பதில் காணாத கேள்விகள் அனுபவங்கள் என்பவற்றைத் தாங்கிய கவிதைகளாக வெளிவரும் இந்நூலில் மாதவி சிவலீலன் அண்மைக் காலங்களில் எழுதிய 53 கவிதைகளை வாழ்தல், வலி, அவதி என்ற மூன்று பிரிவுகளாக வகுத்துத் தந்துள்ளார். வாழ்தல் என்ற பிரிவில் நான், வீடே என் வீடே, வீட்டுப் பூவரசு, வெற்றுச் சிரிப்பு, இருப்பு, அவள், பிள்ளை வரம், அம்மன், தமிழ்க் கடவுள், எனக்கான பாடல், நா காக்க, ரேஹானே ஜப்பாரி, பொம்மை, முறுவல், கொள்ளையிடப்பட்ட தருணங்கள், சொல் வலிமை, விண்மீன், மதிப்பு, நட்பு, கையசைவு, புதிர், பயணம், மங்கியும் மங்காத, கனவு, உன்னைப் போலவே, பிரகடனம், பட்டாம்பூச்சியொன்று, இரசிப்பு, வீட்டுச் சிறை, இமைப்பொழுது, கவி, இனியன் ஆகிய 32 கவிதைகளும், வலி என்ற பிரிவில் யுத்தக் காட்டேரி, இசையே எம் பிரியமே, விதி, சக்தியொன்று, அவிந்திடுமோ, என் தேசத்துத் தோழியரே, ரணம், மண், செஞ்சோலைக் குஞ்சுகளே, அழிந்தது நீங்களல்ல அம்மா, மழையும் கோடைப் புளுக்கமும், காசா மன்றில், தோழி, அழு, தெருவழி அலைதல், முள்ளிவாய்க்கால், சொல்லவேண்டும் போல ஆகிய 17 கவிதைகளும், அவதி என்ற மூன்றாவது பிரிவில் விட்டு விடுதலையாகி, நாளைய சந்ததி ஓலை தூக்குமா?, இத்தனைக்குப் பின்னும், அவதியுறும் இரவுகள் ஆகிய 4 கவிதைகளும் இடம்பெற்றுள்ளன.