ப.சிவானந்த சர்மா (புனைபெயர்: கோப்பாய் சிவம்). யாழ்ப்பாணம்: சர்வானந்தமய பீடம், ஸ்ரீநகரம், அளவோடை வீதி, இணுவில் மேற்கு, சுன்னாகம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2016. (சுன்னாகம்: கஜாநந்த் பிரின்டர்ஸ், மானிப்பாய் வீதி, இணுவில்).
xii, 288 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-4078-01-7.
எழுத்தாளர் கோப்பாய் சிவம் அவர்கள் ஈழத்து இலக்கிய உலகில் சஞ்சரிக்கத் தொடங்கிய ஐம்பதாவது ஆண்டை நினைவுகூர்ந்து வெளியிடப்பெற்றுள்ள பல நூல்களுள் இதுவும் ஒன்றாகும். ஆசிரியர் எழுதிய பல்வேறு கவிதைகளையும் ஒன்பது பிரிவுகளாக வகுத்துத் தந்துள்ளமை சிறப்பாகும். அவ்வகையில் நானிலமும் நானும் (சமூகம்சார் கவிதைகள்), அவளும் நானும் (காதற் கவிதைகள்), மழலைகளும் நானும் (குழந்தைப் பாடல்கள்), புதுக்கவியும் நானும் (புதுக்கவிதைகள்), அரங்கமும் நானும் (கவிதை நாடகம்), இசையும் நானும் (இசைப்பாடல்கள்), இறையும் நானும் (ஊஞ்சற் பாடல்கள்), நிறுவனங்களும் நானும் (நிறுவனங்களின் பாடல்கள்), சுற்றமும் நானும் (வாழ்த்துப் பாடல்கள்) ஆகிய பிரிவுகளின்கீழ் கோப்பாய் சிவத்தின் பல்வேறு கவிதைகள், பாடல்கள், செய்யுள்கள் என்பன வாசகரின் சுவைக்காக பரிமாறப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 61073).