அம்பலவாணர் கௌரிதாசன். திருக்கோணமலை: பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கிழக்கு மாகாணம், 1வது பதிப்பு, 2015. (திருக்கோணமலை: சண் பிரின்டர்ஸ், 224, மத்திய வீதி).
xiv, 98 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-4628-21-2. திருக்கோணமலை மாவட்டம் கிண்ணியா நகரசபை மருங்கிலுள்ள ஆலங்கேணி கிழக்கினைப் பிறப்பிடமாகக் கொண்ட கௌரிதாசன் நாடறிந்த எழுத்தாளர். முப்பது ஆண்டுகளாக எழுதப்பட்ட தனது கவிதைகளில் தப்பிப் பிழைத்தவற்றைத் தொகுத்து ‘என் பாடலாகத்’ தந்திருக்கிறார். காதற் சுவையைக் கம்பரசம் கலந்து தர முயன்றிருக்கிறார். காதல் அல்லாத சமூக சீர்திருத்த வெளிப்பாடுகளையும் விளித்திருக்கிறார். இயற்கை, காதல், சமூகம், ஆத்மீகம், அரசியல் பின்னணிகளோடு பின்னகப்பட்ட கவிதைகளானாலும் தனது அனுபவங்களும் தரிசனங்களுமே கருப்பொருளாக மிகைத்துள்ளது என்கிறார் கவிஞர். பிறிதொருவர் பெற்ற படிப்பினையைக் கூட தனதாக்கி எழுதியிருக்கிறார். கற்பனைக்குக் கணிசமான இடத்தையே வழங்கியுள்ளதால், க