மஜீத். அக்கரைப்பற்று: மூன்றாவது மனிதன் வெளியீட்டகம், இணை வெளியீடு, கொழும்பு: தேசிய கலைஞர் பேரவை, 1வது பதிப்பு, ஜனவரி 1997. (களுபோவில: டெக்னோ பிரின்ட், 83, ஆஸ்பத்திரி வீதி, தெகிவளை).
(6), 26 பக்கம், விலை: ரூபா 50., அளவு: 18.5×12 சமீ.
பொத்துவில் கவிஞர் மஜித் அவர்களின் கவிதைத் தொகுதி இதுவாகும். கவிஞர் மஜித் அவர்கள் ஈழத்து இலக்கியத் தளத்தில் பின்நவீனத்துவ இலக்கியம்சார் படைப்பாளியாவார். ஏற்கனவே வாழ்வின் மீதான எளிய பாடல்கள், சுள்ளிக்காடும் செம்பொடையனும், ஒரு இலையின் மரணம் கவிதைகள், மஜித் கவிதைகள், கதையாண்டி குறுநாவல், உயிர் பிழியும் கவிதைகள், முள்ளிவாய்க்காலும் நிலம் பெருக்கெடுத்த சவக்குளிகள் பொன்ற படைப்பகளை வெளியிட்டவர். நோயினால் பாதிப்படைந்துள்ள நிலையிலும் தொடர்ந்து தான் சொல்லச் சொல்ல தன் மனைவியின் உதவியுடன் நூலாக்கம் செய்வது குறிப்பிடத்தக்கதொன்றாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 22670).