11595 ஏனிந்த தேவாசுர யுத்தம்-கவிதைகள்.

த.கலாமணி. பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஏப்ரல் 2013. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ், முத்திரைச் சந்தி, நல்லூர்).

vi, 34 பக்கம், விலை: ரூபா 150.00, அளவு: 20×14 சமீ.

ஜீவநதி ஆசிரியர் பரணிதரனின் தந்தையார்- த.கலாநிதியின் ஐந்தாவது நூல் இது. போரின் அவலங்களை சர்வதேசத் தளத்தில் நின்று பார்க்கும் பன்னிரு கவிதைகளைக் கொண்ட இந்நூலில் ஐந்து கவிதைகள் மொழிபெயர்ப்புக் கவிதைகளாகும். புதுக்கவிதை, மரபுக்கவிதை, குறும்பா எனப் பலவடிவங்களில் இக்கவிதைகள் அமைகின்றன. வர்க்கத்தின் ஓலம் என்ற கவிதை-உழைத்து உருக்குலைந்த தொழிலாளர்கள் பற்றியது. வியப்பூட்டும் செயலென்ன என்ற கவிதை விஞ்ஞான அறிவியல் கவிதையாகும். இது ஜீவநதியின் 26ஆவது நூல்வெளியீடாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம்  Pam 4742).

ஏனைய பதிவுகள்

32red Offers

Articles Ideas on how to Allege Incentives Bitstarz Casino Review Application Organization Blackjack Models From the 32red Gambling establishment Introduction In order to 32red Local