வி.ரி.இளங்கோவன். யாழ்ப்பாணம்: நாவேந்தன் பதிப்பகம், மயூரன் இல்லம், இராமலிங்கம் வீதி, திருநெல்வேலி கிழக்கு, 1வது பதிப்பு, மே 2015.(யாழ்ப்பாணம்: ஸ்ரீ மாருதி பிரின்டர்ஸ், 555, நாவலர் வீதி).
(12), 146 பக்கம், விலை: ரூபா 460., அளவு: 20×13.5 சமீ., ISBN: 978-955-7795-00-3.
எழுத்தாளர், பேச்சாளர், கவிஞர், விமர்சகர் எனப் பன்முக ஆளுமைகொண்ட வி.ரி.இளங்கோவன் பாரிஸ் நகரில் புலம்பெயர்ந்து வாழ்பவர். இவர் எழுதிய 96 கவிதைகளின் தொகுப்பு இது. கிராம மண்ணின் புழுதி முற்றங்களில், தோட்டங்களில், வயல்களில் குந்தியெழுந்து உறவாடி, உற்றுப்பார்த்து, உறவுகளின் கஷ்டங்களைக் கேட்டு, கவலைகளைப் பகிர்ந்து, வேதனைகளைச் சுமந்து, அணிவகுப்புகளில் நின்று, ஆர்ப்பாட்டங்களில் கலந்து, அடிபட்டு, அடைபட்டு, பெற்ற அனுபவங்களின் உணர்வுகளில் பிறந்த கவிதைகளாக இவரது கவிதைகள் காணப்படுகின்றன. மக்கள் உணர்வுகள், அவர்களின் பிரச்சினைகள், எழுச்சிகள், மக்கள் போராட்டங்கள் ஆகியவற்றைப் பேசும் இக்கவிதைகள் முற்போக்குச் சிந்தனை கொண்டமைந்தவையாகக் காணப்படுகின்றன.