எஸ்.ஆர்.தனபாலசிங்கம். திருக்கோணமலை: நீங்களும் எழுதலாம் வெளியீடு, 103/1 திருமால் வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 2011. (திருக்கோணமலை: அஸ்ரா பிரிண்டர்ஸ், இல. 42, திருஞானசம்பந்தர் வீதி).
83 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 20×14.5 சமீ., ISBN: 978-955-53138-0-3.
கவிதை இதழாகத் தடம்பதித்த ‘நீங்களும் எழுதலாம்’ சஞ்சிகை மார்ச்-ஏப்ரல் 2007இல் இருமாதங்களுக்கு ஒரு தடவை என்ற ஒழுங்கில் வெளிவந்து நவம்பர்-டிசம்பர் 2010 காலப்பகுதிவரை 18 இதழ்களைக் கண்டது. இச்சிற்றிதழின்; வளர்ச்சியில் மூன்றாண்டுகளைக் குறிக்கும் வகையில் இந்நூல் நீங்களும் எழுதலாம் ஆசிரியரினால் எழுதி வெளியிடப்பட்டுள்ளது. இந்நூலில் தமிழமுது சஞ்சிகையில் அமரர் கவிஞர் சில்லையூர் செல்வராசனின் கட்டுரை ஒன்றை முன்வைத்து எழுந்த கருத்தாடல்களையும் வேறு சில கட்டுரைகளையும் முன்னதாக நீங்களும் எழுதலாம் இதழில் முதலாம் ஆண்டில் வெளிவந்த ஆறு இதழ்களிலும் வெளிவந்த கவிதைகளையும் காணமுடிகின்றது. இதழ் 17 வரை மேற்படி நீங்களும் எழுதலாம் இதழுக்கு கவிவளம் சேர்த்த 206 கவிஞர்களின் பெயர்ப் பட்டியலும் காணப்படுகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 50525).