11606 கனகலிங்கம் மாமாவும் பரிமளா ஆன்ரியும்: கவிதைகளின் சங்கமம்.

 சமரபாகு சீனா உதயகுமார். வல்வெட்டித்துறை: குபேந்திரா பதிப்பகம், கூனன் தோட்டம், சமரபாகு, 1வது பதிப்பு, ஜுன் 2016. (யாழ்ப்பாணம்: அன்றா பிறின்டேர்ஸ், 356 ஏ, லக்ஸன் பிளாசா கட்டிடம், கஸ்தூரியார் வீதி).

(4), 36 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 100., அளவு: 20.5×14 சமீ., ISBN: 978-955-43151-2-9.

இக்கவிதைத் தொகுதி வித்தியாசமானது. ஊரிலும் அயலிலும் நடந்த சம்பவங்களை இருவகைப் பாத்திரங்களில் பொருத்தி கவிஞர் உதயகுமார்  இலக்கியச் சுவையேற்றிக் கவிதையாக்கியுள்ளார். இதிலுள்ள சம்பவங்கள் வாசகனுக்கு நகைச்சுவை உணர்வினைத் தந்து சிரிக்கவும் சிந்திக்கவும் வகைசெய்கின்றன. நகைச்சுவைக் கவிதைகள் அருகியுள்ள ஈழத்துத் தமிழ்க் கவிதைச் சூழலில் இத்தொகுப்பு ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிகார மமதையில் மக்களை ஏமாற்றி வசதி வாய்ப்புக்களைப் பெருக்கிக்கொள்ளும் ஊழல் அதிகாரிகளுக்கு இந்நூலைச் சமர்ப்பித்திருப்பது ஆசிரியரின் தார்மீகக் கோபத்தை வெளிப்படுத்துவதாக அமைகின்றது. வேலைக்கள்ளரான கனகலிங்கம் மாமா, தன் மனைவி பரிமளாவிடம் கட்டவிழ்த்துவிடும் சாட்டுப்போக்குகள் ரசனைக்குரியவை. தன் வீட்டுக் கோழியையே விற்று ஆட்டிறைச்சி வாங்கிவரும் மாமாவின் போக்குகள் எம்மை மறந்து சிரிக்கவைக்கின்றன. வடமராட்சி மண்ணின் கிராமியப் பேச்சுவழக்கு இக்கவிதைகளில் கையாளப்பட்டுள்ளமை சிறப்பாகும். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 250625). 

ஏனைய பதிவுகள்

Промокоды 1xBet Скидки 1хБет 6500 Лучшие коды ноября 2024

Content Бет Авиаметеослужба абонентной поддержки Должностной сайт 1xBet казино – 1хБет букмекерская администрация Кооптирование вдобавок апагога средств Маневренная вариант игорный дом 1xbet Привлекательные бонусы и