விஜிதா ரகுநாதன். பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஆனி 2015. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி).
x, 74 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-4676-29-9.
இத்தொகுதியில் பல்வேறு பாடுபொருள்களைத் தாங்கிய ஐம்பதுக்கும் மேற்பட்ட கவிதைகளைக் காணமுடிகின்றது. தன்னைச் சூழ நடைபெறுகின்ற விடயங்களால் பாதிக்கப்பட்ட இவரது சிந்தனையின் வெளிப்பாடாக இவை அமைகின்றன. போர், போர் சார்ந்த அவலங்கள், சமூகக் கொடுமைகள் தொடர்பான கவிதைகளில் விஜிதாவின் படைப்பாற்றலில் ஒருவித முதிர்ச்சி நிலையை அவதானிக்க முடிவதாக அணிந்துரையில் பேராசிரியர் கி.விசாகரூபன் குறிப்பிடுகின்றார். இது 46ஆவது ஜீவநதி வெளியீடாக வெளியிடப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 61482).