ஜமீல் (இயற்பெயர்: அப்துல் றகுமான் அப்துல் ஜமீல்). மருதமுனை: புதுப்புனைவு இலக்கிய வட்டம், 1வது பதிப்பு, ஜுன் 2015. (அக்கரைப்பற்று: நியூ செலெக்ஷன்).
(14), 70 பக்கம், விலை: ரூபா 280., அளவு: 20×14 சமீ., ISBN: 978-955-7733-00-5.
மிக எளிதில் நொறுக்கப்படக்கூடிய விளிம்புநிலையில் உள்ள பெண்கள், சிறுவர்கள் மற்றும் குழந்தைகளின் தேவைகள், பிரச்சினைகள், குறித்துச் சிந்திக்கும் இக்கவிஞர் அவற்றையே தன் பாடுபொருளாகக் கொண்டுள்ளார். கவிஞர் ஜமீல் நீண்டகாலமாக சிறுவர்கள் தொடர்பில் அதீத அக்கறை செலுத்துபவராக பல்கலைக்கழக ஆய்வாளர்களாலும் விமர்சகர்களாலும் கவனத்திற் கொள்ளப்படுபவராக இருந்துவருகிறார். தாளில் பறக்கும் தும்பியில் சிறுவர்களினதும் விருப்பு, வெறுப்புக்கள், முறையிடுதல்கள், குதூகலிப்புகள், துயர் பகிர்வுகள், கனவுலகம், கழிவிரக்கம், காருண்யம், கற்பனை உத்திகள், வகுப்பறைச் செயலூக்கங்கள், வெளிநடத்தைப் பிறழ்வுகள், உளவியல் சிக்கல்கள், நுணுக்கமான பார்வை அல்லது அவதானம், பிரிவின் நீட்சி, ஏங்கித் தவிப்புறுதல், குழந்தைகளுக்கும் இயற்கைக்கும் இடையிலான நெருங்கிய உறவு, போன்றவை செப்பமான கட்டுக்களுள்ள கவிதை மொழியில் வடிக்கப்பட்டுள்ளன.