11632 துணிச்சற்காரன்-கவிதைகள்.

நெடுந்தீவு நேதாமோகன் (இயற்பெயர்: செ.மோகன்ராஜ்). பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஜனவரி 2015. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ மாருதி பிரின்டர்ஸ், 555, நாவலர் வீதி).

xiv, 78 பக்கம், விலை: ரூபா 200.00, அளவு: 19.5×13.5சமீ., ISBN: 978-955-4676-18-3.

போரின் பின்னதான அவலங்களை, தமிழ் மக்களின் பிரச்சினைகளை வாசகர்கள் மனதில் பதியவைக்கும் வகையிலான கவிதைகள் இவை. வீச்சான, கட்டிறுக்கமான தெளிவான சொற்பிரயோகம் இக்கவிதைகளின் சிறப்பம்சமாகின்றது. நேதாமோகன் நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவரது ஆழ் நிலைப்பட்ட வாசிப்புக்கும் தேடலுக்கும் மொழியழகுபடுத்தப்பெற்ற சிறந்த கவிதைகளின் தொகுப்பாகி வெளிவந்திருக்கிறது இந்தக் கவிதை நூல். சமுதாய அவலங்களையும், சமுதாயத்தில் விளைந்து விட்ட சிறுமைத்தனங்களையும், சாமான்யனின் காட்சிக்குப் புலப்படாத மனித மாண்பற்ற கோரங்களையும் அனுபவித்து வருந்தியதால் விசுவரூபம் எடுத்த மொழியின் வண்ண வடிவங்களே கவிதைகளாகி இந்நூலை இறுக்கமாக்கியுள்ளன. இது கவிஞரது முதலாவது கவிதைத் தொகுப்பாகும். வாழ்க்கையின் திரும்பும் திசைகள் யாவற்றையும் பார்த்துணர்ந்து வடித்த கவிதைகளின் தொகுப்பாக இது விளங்குகிறது. உயிர்த் துடிப்பும் உணர்வுப் பெருக்கும் விரியும் இக்கவிதைகளின் வண்ணங்களால் துணிச்சற்காரன் சிறப்புறுகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 61495).

ஏனைய பதிவுகள்

Online Roulette 2023 Um Echtgeld Spielen

Content Zahlungsoptionen Bei Online Poker Echtgeld – Keine Einzahlung 10 euro bonus Online -Casino Casino Ohne Registrierung Mit Echtgeld Beste Online Casino Mehr Freiheit Bei