க.பேரின்பதாசன். யாழ்ப்பாணம்: கந்த பேரின்பம் க.பேரின்பதாசன், மஞ்சவனப்பதி, கொக்குவில் மேற்கு, கொக்குவில், இணை வெளியீடு, மன்னார்: மன்னார் தமிழ்ச் சங்கம், 1வது பதிப்பு, 2015. (மன்னார்: ஸ்கை அச்சகம்).
xxx, 149 பக்கம், சித்திரங்கள், புகைப்படங்கள், விலை: ரூபா 350., அளவு: 20.5×14.5 சமீ.
ஆசிரியராகவும், உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளராகவும் பணியாற்றியவர் இந்நூலாசிரியர். ஓர் உண்மைக் கவிஞனுக்குரிய உணர்வு வெளிப்பாட்டை இவருடைய கவிதைகளில் காணமுடிகின்றது. கோபம், ஆதங்கம், மகிழ்ச்சி, இயற்கை வனப்பில் இதயம் பறிகொடுக்கும் நிலை, இயற்கையைப் பேணவேண்டும் என்ற இதயபூர்வமான ஆவல், அரசின் அநியாயங்களைச் சாடும் கோபம், வாழ்க்கைக்குத் தேவையான தத்துவங்கள் என பல்துறைசார்ந்த கவிதைகளை இவர் படைத்திருக்கிறார். சில இடங்களில் வசனநடைக் ‘கவிதைகளாக’அமைந்துவிடுகின்றமையும் குறிப்பிடத்தக்கது. பொதுவான பாடல்கள் (19), சமயப் பாடல்கள் (இந்து சமயப் பாடல்கள் (13), கிறிஸ்தவ சமயப் பாடல்கள் (7), இஸ்லாமியப் பாடல்கள் (2)), நெஞ்சில் நிறைந்தவை (5), அறிவுரைகள் (21), தனிப்பாடல்கள் (6), யுத்த அநர்த்தம் (11), காதல் (4), நகைச்சுவை(10), ஆகிய தலைப்புகளில் இவர் தனது 98 கவிதைகளையும் பிரித்துத் தந்துள்ளார். இறுதியில் திருவிளையாடல் என்ற தலைப்பில் ஒரு நாடகத்தையும் இணைத்துள்ளார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 249068).