11638 நறுக்: ஹைக்கூ கவிதைகள்.

மொழிவரதன் (இயற்பெயர்: க.மகாலிங்கம்). கொட்டகலை: கொட்டகலை தமிழ்ச்சங்கம், 34/20, மொழி அகம், கணபதிபுரம், கொட்டக்கலை, 1வது பதிப்பு, மார்ச் 2016. (ஹட்டன்: யுனிவர்சல் பிரின்டர்ஸ்).

(10), 11-62 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 300., அளவு: 20×14.5 சமீ., ISBN: 978-955-0936-01-4.

இத்தொகுப்பில் உள்ள 51 ஹைக்கூ கவிதைகளில்; பெரும்பாலானவை அரசியல், மனிதாபிமானம் மற்றும் இயற்கை பற்றியே பேசுகின்றன. இதில் இடம்பெறும் மல்லிகை சி.குமாரின் கருத்தோவியங்கள் கவிதைகளின் தொனிப்பொருளை மேலும் தெளிவாக்குகின்றன. ஆங்காங்கே மலையக மண்ணின் வாசம் வீசுகின்ற கவிதைகளும் உள்ளன. ஓய்வுநிலைக் கல்விப் பணிப்பாளரான மொழிவரதன் பதுளையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். கொட்டகலையை வசிப்பிடமாகக் கொண்டு அங்கு கொட்டகலை தமிழ்ச்சங்கத்தினை இயக்கிவருகின்றார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 61247).

ஏனைய பதிவுகள்