11639 நாவலர் பிள்ளைத்தமிழ்: மூலமும் உரையும்.

மு.கந்தையா. காரைநகர்: காரைநகர் தமிழ் வளர்ச்சிக் கழகம், 1வது பதிப்பு, தை 1979. (யாழ்ப்பாணம்: செட்டியார் அச்சகம்).

xxxiv, 158 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5×12 சமீ.

பிள்ளைத்தமிழ் என்பது தமிழ் இலக்கியத்தில் வழங்கும் பிரபந்த நூல் வகைகளுள் ஒன்று. புலவர்கள் தாம் விரும்பிய தெய்வங்கள், சமயா சாரியர்கள், புலவர் பெருமக்கள், ஆதீனகர்த்தர், அரசர், உபகாரிகள், அவர் அவர்கட்கு உகந்தவர்கள், ஆகியோரைக் குழந்தையாக உருவகித்து, கற்பனை பல அமையப் பாடப்படுவது பிள்ளைத்தமிழாகும். ஏழாலைக் கவிஞர் மு.கந்தையா அவர்கள் நல்லை நகர் நாவலரைப் பிள்ளையாகப் பாவித்து இயற்றிய பிள்ளைத் தமிழ் இலக்கியம் இது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 21566).

ஏனைய பதிவுகள்