கவிஞர் அபூபக்கர் (இயற்பெயர்: யு.ஆ.அபூபக்கர்). காத்தான்குடி 2: முனீரா பப்ளிக்கேஷன்ஸ், 86, ஓல்ட் ரோட், 1வது பதிப்பு, ஏப்ரல் 1980. (சாவகச்சேரி: திருக்கணித அச்சகம், மட்டுவில்).
60 பக்கம், விலை: ரூபா 5., அளவு: 18×13 சமீ.
கவிஞர் அபூபக்கரின் ஆன்மீகக் கவித்துவச் சிந்தனையில் உதித்த கருத்துக்கள் அழகிய கவிதைகளாகியுள்ளன. கவிதைகளின் கருப்பொருள் பற்றி நுழைவாயிலில் அவர் பின்வருமாறு கூறிவரவேற்கிறார். ‘நான் யார்? நான் ஒரு மனிதன். என்னுள் எத்துணையோ இரகசியங்கள் மண்ணிலே புதையுண்ட மணிகளாக அடங்கிக் கிடக்கின்றன. நான் யார்? இந்தக் கேள்வியை மீண்டும் மீண்டும் என்னுள்ளே நானே கேட்டுக் கொள்கிறேன். கேள்வியின் உசாவுதலில் உண்மைகள் உதயமாகின்றன. புதைந்துவிட்ட இரகசியங்கள் மண்ணிலிருந்து கிளம்பும் நீரூற்றாய் வெளியாகின்றன. ஹிராக் குகையிலே நுழைந்த ஒளி வெள்ளம் என்னை மூழ்கடிக்கிறது. என்னுள்ளே ஒரு உலகத்தைக் காண்கிறேன். சூரியன் சந்திரன் உடுக்கணங்கள் கோள்கள் மலைகள் புரியாத பல உலகங்கள். யாவும் என்னுள்ளே இருக்கக் காண்கின்றேன். என்னைப் படைத்து ஆளும் இறைவனையும் என்னுள்ளே காண்கின்றேன்.’ (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 3168).