முகம்மதுத்தம்பி முகம்மது நௌபல். மருதமுனை 3: எம்.எம்.மிஹ்ழார், ஆயிஷா வெளியீட்டகம், 520/1, மசூர் மௌலானா வீதி, 1வது பதிப்பு, ஏப்ரல் 2017. (மருதமுனை: அப்னா பிறின்டர்ஸ்).
xx, 105 பக்கம், விலை: ரூபா 280., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-42405-3-7.
முகம்மதுத்தம்பி முகம்மது நௌபல் தனது ஆரம்பக் கல்வியை பெரியநீலாவணை புலவர்மணி சரிபுத்தீன் வித்தியாலயத்தில் கற்று உயர்தரத்தை மருதமுனை அல் மனார் மகா வித்தியாலயத்தில் பூர்த்திசெய்தவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வியாபார நிர்வாகமாணிப்பட்டம் பெற்றவர். இவரது கவிதைகள், நினைவேக்கம் (பால்யகால நினைவுகள்), உலக அரசியல் (நியாயங்களைத் தேடி, போர்க்காடு), குடும்ப பாசம் (அவள் வளர்ந்துவிட்டாள்), சமூக விமர்சனம் (மெல்லச் சாகும் உயிர்கள், முறைப்பாடு, எமது மண், பரிணாமம், பொன்னாடை, முகப்புத்தகம், யாசகன்) என்ற சில அம்சங்களைத் தொட்டுச் சென்றாலும் அவருடைய கவிதை வெளியில் நிழலாகப் பின்தொடர்வது காதலின் தகிப்புத்தன்மையாகும். இதுவே இவரை அஜந்தா சித்திரங்களில் ஒருத்தியைப் பொருத்திப் பார்க்கவைக்கின்றது. ஒருத்தியின் புருவங்களில் மழையைக் காண்கின்றது. பெண்கள் தேவ கன்னிகளாகத் தெரிகின்றார்கள். நௌபல் எழுதிய நான்காவது கவிதைத் தொகுப்பு இது.