வே.குமாரவேல். கொழும்பு 13: வே.குமாரவேல், 75/2, கல்பொத்த வீதி, 1வது பதிப்பு, ஜுலை 1999. (அச்சக விபரம் தரப்படவில்லை).
(8), 76 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19×14 சமீ.
இந்நூலில் கவிஞர் குமாரவேல் எழுதிய 76 கவிதைகள் வேர்கள், என் இதயத்தில் இவர்கள், இனிமை, பெண், பாலைவன உதிரிகள், அரசியலை நோக்கினேன், வாழ்க்கையின் வழியில் ஆகிய ஏழு பிரிவுகளில் தொகுக்கப்பட்டுள்ளன. வேர்கள் என்ற முதலாவது பிரிவில் தமிழ், தெய்வம், தாய், தந்தை, காதல் உணர்வு, நட்பு, குடும்பம், குழந்தை, தாயும் தாரமும், சிவம் சக்தி ஆகிய 10 கவிதைகள் உள்ளன. என் இதயத்தில் இவர்கள் என்ற பிரிவில் கொடுத்துச் சிவந்தவன், திருவள்ளுவரும் குறளும், சுவாமி விவேகானந்தர், மகாத்மா காந்தி, கண்ணதாசன் ஆகிய 5 கவிதைகள் உள்ளன. இனிமை என்ற பிரிவில் கம்பன் கண்டது கற்பனையோ, கவி கொடுக்கும் காதலி, ஈழமலைநாடு, கானக இன்பம், பாலைவனப் பசுந்தரை, இசைக் குயில், இசை, இனிமையெனும் மொழி ஆகிய 8 கவிதைகள் உள்ளன. பெண் என்ற பிரிவில் புதுமைப்;பெண், சீதனம், கற்பு, ஆகிய 3 கவிதைகள் உள்ளன. பாலைவன உதிரிகள் என்ற ஐந்தாவது பிரிவில் சூரியனே, கடல் கடந்த வாழ்க்கை, சீதனம் தேடி, நாட்டுக்கு நாடு, அவள் வளர்த்த பூனை, அவள் செய்த முடிவு, அவள் முகம் பார்ப்பேனோ, தேவை சில தமிழ் வார்த்தைகள் ஆகிய 8 கவிதைகள் உள்ளன. அரசியலை நோக்கினேன் என்ற பிரிவில் அரசியல், வழி அமைப்போர், அரசியல் தகுதி ஆகிய 3 கவிதைகள் உள்ளன. வாழ்க்கையின் வழியில் என்ற ஏழாவது (இறுதி) பிரிவில் சொல், பாடங்கள், வறுமை, எது தியாகம், கரு சிதைவு, நானும் நாமும், வேர், கண்தானம், தனிமை, தர்மம், அனுபவம், மது, விஞ்ஞானம், சக்தி உனக்குத் தேவை என இன்னோரன்ன 39 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 18209).