லாவன்னா லத்தீப். அக்கரைப்பற்று: அதாஉல்லா பவுண்டேசன், 1வது பதிப்பு, 2016. (அக்கரைப்பற்று: நியு செலெக்ஷன் அச்சகம்).
xix, 103 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-43538-0-0.
குரல் வளம் மிக்க பாடகராகவும் இசைக்கலைஞராகவும் வாய்மொழிக் கவிஞராகவும் அக்கரைப்பற்றில் அறியப்பட்டிருப்பவர் கவிஞர் லாவன்னா லத்தீப். அரை நூற்றாண்டுக்கு மேலான கலை இலக்கிய அனுபவம் இவருடையது. பத்திரிகைகளுக்கு அதிகம் எழுதாமல் நூல் வெளியிடாமல் இருந்த காரணத்தாலோ என்னவோ இலக்கிய உலகில் பரவலாக இவர் பேசப்படவில்லை. முன்னாள் கௌரவ அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்களை தலைவராகக் கொண்டியங்குகின்ற அதாஉல்லா பவுண்டேசன் இந்நூலை 14-09-2016ல் அக்கரைப்பற்றில் வெளியிட்டு வைத்திருந்தது. இத்தொகுப்பு தன்னுணர்வுக் கவிதைகளையும் ஆன்மீக கவிதைகளையும் உள்ளடக்கியிருக்கின்றன. சில்லிக்கொடி ஆற்றோரம் கவிதைப்பூ ஜில்லென்று பூத்ததையும், தாலி போட்ட ஆறு தனக்கு வேலிபோடாது கவிதை தந்ததையும் பொத்தானை வயற்காடு சத்தான கவிதை ஈந்ததையும் சிறுநீத்தைக் காணிகளில் நேர்த்தியாய் கவிதை முத்துக்கள் விளைந்ததையும் கோளாவில் தெரு வீதி கோணாமல் கவிதை தந்ததையும் மண்வாசனைக் கவிதைகளாக மகிழ்வோடு கூறுகின்றார்.