செல்லத்துரை குணரத்தினம். கொழும்பு: கொழும்புத் தமிழ்ச் சங்கம், இல. 7, 57ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, ஜனவரி 1996. (கொழும்பு 6: கார்த்திகேயன் பிறைவேற் லிமிட்டெட், 501/2, காலி வீதி, வெள்ளவத்தை).
(96) பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×21 சமீ.
கொழும்புத் தமிழ்ச்சங்கம் தனது பொன்விழாவை 1992இல் கண்டதையொட்டி ஆசிரியரால் இயற்றப்பட்ட போற்றிசைக் கவிதைகள். இந்நூலின் மூலம் கொழும்புத் தமிழ்ச்சங்க வளர்ச்சிக்கு உதவிய அறிஞர்களையும் தமக்குக் கல்வி கற்பித்த ஆசிரியர்களையும் தமிழுலகிற்கு அறிமுகம் செய்துமகிழ்கிறார். இலக்கியச் செம்மல் செ.குணரத்தினம் இலங்கை அரசின் முன்னாள் பிரதேச அபிவிருத்தி அமைச்சுச் செயலாளராகத் தன் அரசபணியில் இருந்து ஓய்வுபெற்றவர். 1990 முதல் பொன்விழாக் காலத்தில் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் தலைவராகவும் சேவையாற்றியவர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 22397).