புதுக்குடியிருப்பு ஜெயம் ஜெகன். புதுக்குடியிருப்பு: புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம், 1வது பதிப்பு, ஜுன் 2015. (யாழ்ப்பாணம்: நோபிள் பிறின்ரேர்ஸ், இல. 817, ஆஸ்பத்திரி வீதி).
xvi, 80 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 250., அளவு: 20×14 சமீ., ISBN: 978-955-7897-00-4.
இடப்பெயர்வின் காட்சிகளை வெளிக்காட்டும் அட்டைப் படத்துடன், செங்கை ஆழியானின் அணிந்துரையுடன், ஏன் சொல்லவில்லை, இயேசு பாலகா எங்கள் ஊரில் ஒருமுறை பிறப்பாயா?, போர்க்காலமும் ஊர்க்கோலமும், கண்டபடி குண்டடி, இனியும் இடர்பட இதயமில்லையே, பிஞ்சோலையும் செஞ்சோலையும், போன்ற சில நீண்ட கவிதைகளுடன் பல குறுங்கவிதைகளையும் கொண்டதாக இலக்கிய வரம்புகளுக்குள் கட்டுப்படாமல், தம் உணர்வுகளுக்கு முக்கியத்துவமளித்து, எதுகை மோனையுடன் இயற்றப்பெற்ற கவிதைகளைக் கொண்டதாக இத்தொகுப்பு அமைந்துள்ளது. வன்னிமக்களின் போர்க்கால அனுபவங்களை இக்கவிதைகள் இனம்காட்டுகின்றன. ஒவ்வொரு கவிதையும் ஒரு சம்பவத்தின் பதிவாகின்றது.