11660 மரணத்தில் மலர்ந்த மலர்கள்.

மனோஷா (இயற்பெயர்: எஸ்.சசிரேகா). யாழ்ப்பாணம்: மறுயுகம் வெளியீடு, இல. 42, சேர் பொன் இராமநாதன் வீதி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2018. (யாழ்ப்பாணம்: ஜெயஸ்ரீ பிரிண்டர்ஸ், 34 பிரவுண் வீதி).

(2), 38 பக்கம், விலை: ரூபா 50., அளவு: 20×11.5 சமீ.

மரணத்தில் மலர்ந்த மலர்கள்.

மனோஷா (இயற்பெயர்: எஸ்.சசிரேகா). யாழ்ப்பாணம்: மறுயுகம் வெளியீடு, இல. 42, சேர் பொன் இராமநாதன் வீதி, 2வது பதிப்பு, செப்டெம்பர் 2020, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2018. (யாழ்ப்பாணம்: ஜெயஸ்ரீ பிரிண்டர்ஸ், 34 பிரவுண் வீதி).

(3), 38 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-7286-05-1.

ஆயுதப் போருக்குப் பின்னரும் முன்னருமான, இன்னொரு வகையில் சொல்வதானால் ஆயுதப்போராட்டத்தின் தேல்விக்கு முன்னரும் பின்னருமான ஈழத்தமிழ்ச் சனங்களின் அடிமைவாழ்வின் ஏக்கங்களையும் வெறுமைகளையும், உணர்வுகளையும், அடிமைப்பட்ட சனங்களின் இதயத்தில் எழும் மென்மையான காதல் உணர்வுகளையும் இக்கவிதை வரிகள் அழகாகப் பதிவுசெய்கின்றன. இயல்பாக மனதுள் பிரவகித்துவரும் மனித உணர்வுகளை இக்கவிஞர் இறுக்கமான வரிகளில் சொல்லிச் செல்கின்றார். கவிதை எழுத வேண்டும் என்பதற்காக இவற்றைத் தான் எழுதவில்லை என்று கூறும் இவ்விளம் கவிஞர், தனது வாழ்வியல் சூழலில் தன்னைப் பாதித்த விடயங்களால் மனதில் பதிந்துவிட்ட கரு(த்து)க்களை அவ்வப்போது பத்திரிகைகளில் பிரசவித்துள்ளார். அநீதிக்கு மசிந்துகொடுக்காத, கொடுமைகளைக் கண்டு குறுகிப் போகாத இதயம் கொண்ட எளிமையான கவிஞர் ஒருவரை இத்தொகுப்பு நமக்கு அடையாளம் காட்டியுள்ளது. 1984 முதல் 2015 வரை வெளியான அத்தகைய  படைப்புகளின் தொகுப்பே இந்நூலாகும்.

ஏனைய பதிவுகள்