யாழினி ஜோதிலிங்கம். தமிழ்நாடு: அணங்கு பெண்ணிய பதிப்பகம், 3, முருகன் கோவில் தெரு, கணுவாப்பேட்டை, வில்லியனூர், புதுச்சேரி 605110, 1வது பதிப்பு, டிசம்பர் 2015. (சிவகாசி: மாறன் இம்பெக்ஸ்).
(9), 10-108 பக்கம், விலை: இந்திய ரூபா 90., அளவு: 21.5×14 சமீ.
நிவேதா என்னும் புனைபெயருடன் தனது பதின்மங்களில் எழுதத் தொடங்கிய யாழினியின் முதலாவது தொகுப்பு இது. யாழ்ப்பாணத்தில் பிறந்து, கொழும்பில் வளர்ந்து, தற்போது ரொறன்டோவை வதிவிடமாகக் கொண்டவர். இத்தொகுப்பின் பெரும்பாலான கவிதைகள் 2006-2008 காலகட்டத்தில் எழுதப்பட்டவை. ‘ரேகுப்தி’ என்னும் வலைப் பதிவில் இவரது ஆரம்பகால படைப்புக்கள் வெளியாகின. இவரது எழுத்து அரசியல்-பாலின வன்முறை, உடல் மற்றும் மொழிசார் அரசியலை அடிப்படையாகக் கொண்டவை. யாழினியின் கவிதை மொழி நெருக்குறும் இனத்துயரின் வலிகளுக்கும் மண்ணின் தீராத நினைவுகளுக்கும் புலம்பெயர்நிலத்திலும் உருவம்தரும் வலிமைமிக்கது. துயர்களும் பிரிவுகளும்கூட முடிவுக்கானவை அல்ல என்பதைச் சொல்லிச் செல்லும் தொன்மையும் முதிர்ச்சியும் படிந்த குரலூடாக வரலாற்றின் முகத்தில் கீறும் முட்களாகச் சில கவிதைகள் அமைகின்றன. இன, பாலினக் காயங்களைக் கடக்கவும் மீறவும் வாழவும் முயலும் கவிதைகள் இவை.