11666 மழுங்கடிக்கப்பட்ட அடையாளங்களும்.

மனோகரி (இயற்பெயர்: செல்வமனோகரி சிவானந்தன்). கொழும்பு: Mans Inc. Sri Lanka, 1வது பதிப்பு, 2013. (அக்கரைப்பற்று: நியூ செலெக்ஷன்).

xiv, 110 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 22×14 சமீ., ISBN: 978-955-1482-02-2.

கவிஞர்கள் சோ.பத்மநாதன், அனார் ஆகியோரின் உரைகளுடன் கூடிய மனோகரியின் கவிதைகளின் தேர்ந்த தொகுப்பு இது. இடைவெளிகள், எதார்த்தம், பாடகள், முகம், கடல், பிணக்கு, பெண்ணியம், இனியும் ஓடு, பொசுக்கு, அப்பட்டம், யாத்திரை, பிளவு, சிறகுகள், பிரிவு, ஜலப்பிரளயம், சகி, பழங்கணக்கு, இரணம், வியர்த்தம், பிரவாகம், வேற்றுக்கூடுகள், ஸ்நேகம், சா, மனவேர்கள், சிதறடித்தல்கள், பொய், புறக்கணிப்பு, மெருகு, தேய்வு, ஒரு நதியின் பயணம், வேலிக்குள் பயிர், மரண கீதம், கடைசித் தொலைவு, காற்று, பாழ், சந்தோஷ வேதனை, ஒரு மரணத்தை எதிர்பார்த்து, இரண்டாயிரத்துச் சொச்சங்களில், ஏதிலிகள், காவு கொடுத்தவர்கள், நதி, மலை, தீர்வுகளல்ல, அலைகளினூடு அலைதல்களல்ல, மௌனச் சிதை, இறுதிப் பரிசு, தெளிந்த நதி, ஒரு மனிதம் தேடி, இன்னுமொரு கங்கை, காட்டு மரம், நிலமகள், வதம், போராட்டம், கேவலரானோம், கடல் வருகுது, கூடு-1, கூடு-2, நிகும்பலை யாகம், ஒப்பந்தங்கள், ஆதாம் காலத்திற்கே, மாற்றீடுகள், மயானப் பார்வை, கானங்கள் குயில்களுக்குத் தான் ஆகிய 63 தேர்ந்த கவிதைகளும்  ஒன்று போலவே இருக்கும் வெவ்வேறு நதிகள் என்ற தலைப்பில் அனார் எழுதிய உரையும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 234912). 

ஏனைய பதிவுகள்