வேலணையூர் தாஸ் (இயற்பெயர்: கந்தையா சோதிதாசன்). யாழ்ப்பாணம்: யாழ். இலக்கியக் குவியம், இல. 37, 2ம் குறுக்குத் தெரு, கொழும்புத்துறை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2014. (யாழ்ப்பாணம்: ஜே.எஸ். கிராபிக்ஸ், இல. 54, இராஜேந்திரா வீதி).
xvi, 76 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20.5×13.5 சமீ.
என் நிலம் தொடக்கம் கடலில் தொழிலொடு போனீரே என்பது வரை 59 கவிதைப்பூக்கள் இத்தொகுப்பில் மணம்வீசுகின்றன. ஒவ்வொரு கவிதையும் எமது வாழ்வியலை எளிமையான மொழிநடையில் மிக அழகாகவும் நேர்த்தியாகவும் எடுத்தியம்புகின்றன. இவற்றில், தமிழரின் இந்நிலை பாடுக கவியே, கதை கெட்டு தூங்க என் கண்மணி, நிமிர்க யாழகமே, கடலில் தொழிலொடு போனீரே ஆகிய இறுதி நான்கும் இசைப்பாடல்களாக உள்ளன. சித்த மருத்தவரான வேலணையூர் தாஸ், தமிழ் ஆசிரியராக முன்னர் பணியாற்றியவர். தமிழகத்தில் புலம்பெயர்ந்து வாழ்ந்தவேளையில், சித்த மருத்துவத்துறையில் தேர்ந்து, தாயகம் திரும்பியதும் அத்துறையையே தொடர்ந்தவர். இலக்கிய ஈடுபாட்டினால், யாழ்.இலக்கியக் குவியம் என்ற இலக்கிய அமைப்பினை உருவாக்கி வழிநடத்தி ஆரோக்கியமான இளம் இலக்கியவாதிகளுக்கு களம் அமைத்துக் கொடுத்தும் வருகிறார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 57641).