அல்பேட் இதய மனோகர். (இயற்பெயர்: செல்வராசகோபால் பசுபதி). கனடா: நிழல் வெளியீடு, ஜீவா பதிப்பகம், ரொரன்ரோ, 1வது பதிப்;பு, நொவம்பர்; 1992. (கனடா: றிப்ளெக்ஸ் அச்சகம், 1108, Bay Street, Toronto, Ontario, M5S 2W9).
60 பக்கம், புகைப்படங்கள், விலை: கனடிய டாலர் 2.50, விலை: ரூபா 21.5×14 சமீ.
மட்டக்களப்பு தோற்றாத் தீவில் பிறந்து வளர்ந்து தற்போது கனடாவில் வாழும் ஈழத்துப் பூராடனாரின் (செல்வராசகோபால்) குடும்பத்தவரான பசுபதி அவர்கள் தமிழில் எழுதிய குறும்புக் கவிதைகள் இதில் இடம்பெற்றுள்ளன. இக்கவிதைகள் அவ்வப்போது புலத்தின் பத்திரிகைகளில் இடம்பெற்றுள்ளன. பத்துக் கற்பனையும் பஞ்சமாபாதகமும் பறந்து போயிற்று, என்று தொடங்கி, I mind my own Business,வயிற்றுக்காகத் தலை வளர்த்த வாலிபம், நாம் இருவர் நமக்கிருவர், இனவாதமல்ல இரத்தவாதமே வேண்டும், இது வெற்றியா தோல்வியா, ஒன்று செய்தால் என்ன, போச்சுடா போச்சு, மரணத்தின் இரு விழிகள், சாயமேற்றிக்கொள்ளும் மாயைகள், அதை அறியாதிருக்கட்டும் அப்போதாவது தருமம் நிலைக்கட்டும், வதைக்காமல் இருந்தாலே போதும் என இன்னோரன்ன தலைப்புகளில் இவர் இக்கவிதைகளை எழுதியுள்ளார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 13517).