கலைஞர் குழந்தை (இயற்பெயர்: செ.செபமாலை). நானாட்டான்: நானாட்டான் பிரதேச கலாச்சாரப் பேரவை, 1வது பதிப்பு, நவம்பர் 2000. (மட்டக்களப்பு: புனித வளனார் அச்சகம்).
xi, 51 பக்கம், விலை: ரூபா 50., அளவு: 19×13.5 சமீ.
சுமார் நாற்பது ஆண்டுகள் ஆசிரியப் பணியோடு கலை இலக்கியப் பணியும் ஆற்றியவர் கவிஞர் குழந்தை. நாட்டுக்கூத்துக் கலையில் அவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. அவ்வாறே இடைக்கிடையே தன் கவிதைகளாலும் மக்களைக் கவர்ந்து வந்தவர். அவரது கவிதைகளின் தேர்ந்த தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. இதில் இறையாசீர் அளித்திடுவீர், தரணியாம் மாதோட்டம் தன்னில் உண்டு, நாம் இலங்கையர்கள், பாரதி இன்றிருந்தால், நாமும் நமது நாடும், மாண்புமிகு மாதோட்டம், வீதியில் அலைந்து வாழ்வோர் வெற்றியும் பெறுவாராக, மறைவளர்க்கும் மருதமடு, எழிலுறும் எனது கிராமம், மாதோட்ட மாநாட்டின் மாண்புரைக்கும் அம்மானை, ஆசிரியர்கள் நாட்டின் கண்கள், கண்ணீராற் காத்தோம் கருகத் திருவுளமோ, மாண்புறு மாதோட்டம், உயர்வோடு மலரவேண்டும் ஆகிய தலைப்புகளில் இக்கவிதைகள் எழுதப்பட்டு பல்வேறு ஊடகங்களிலும் பிரசுரமானவை. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 22145).