வை.க.சிற்றம்பலம். யாழ்ப்பாணம்: சிற்றம்பலம் சிவானந்தராஜா, இந்துக் கல்லூரி வீதி, செட்டிகுறிச்சி, பண்டத்தரிப்பு, 1வது பதிப்பு, மே 2015. (பண்டத்தரிப்பு: வானவில் பிறின்டேர்ஸ், மாதகல் வீதி).
32 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 20×14.5 சமீ.
இணுவிலைச் சேர்ந்த கலாபூஷணம் புலவர்மணி திரு. வை.க.சிற்றம்பலம் அவர்கள் 100 வயதைக் கடந்த நிலையில் நாற்பதுக்கும் மேற்பட்ட பல்வகைப் பிரபந்தங்களைப் பாடியுள்ளார். 2.11.2015இல் தனது 101ஆவது அகவையில் மறைந்தார். கொழும்புத் தமிழ்ச் சங்கத்தினரால் சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாவையொட்டி 1992இல் அகில இலங்கை ரீதியில் நடத்தப்பெற்ற கவிதைப் போட்டியில் இவர் இயற்றிய சுவாமி விபுலானந்த அடிகளார் நான்மணிமாலை என்ற படைப்பு முதலாம் பரிசைப் பெற்றது. அதன் நூல்வடிவம் இது. திரு. வை.க.சிற்றம்பலம் அவர்களுக்கு கொழும்புத் தமிழ்ச் சங்கம் ‘தமிழ்நிதி’ என்ற சிறப்புப் பட்டத்தை வழங்கும் நிகழ்வின் நினைவாக இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது.