ஈழவாணி. (இயற்பெயர்: வாணி ஜெயா தீபன்). சென்னை 600094: பூவரசி பப்ளிக்கேஷன்ஸ், 20/2 சக்காரியா காலனி, 1வது தெரு, சூளைமேடு, 1வது பதிப்பு, ஜனவரி 2016. (சென்னை 600094: பூவரசி பப்ளிக்கேஷன்ஸ், 20/2 சக்காரியா காலனி, 1வது தெரு, சூளைமேடு).
(18), 19-120 பக்கம், ஓவியங்கள், விலை: இந்திய ரூபா 150., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-93-81322-37-6.
ஈழவாணி இலங்கையில் வவுனியாவில் பிறந்தவர். கொழும்பு பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறையில் பட்டப்படிப்பை மேற்கொண்டவர். தேடல், செந்தணல் ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். தற்பொழுது புலம்பெயர்ந்து மலேசியாவிலும், இந்தியாவிலுமாக வசித்து வருபவர். பூவரசி என்ற பெயரில் இணையத்தளமொன்றை நடத்தும் இவர், அதே பெயரில் அரையாண்டு இதழொன்றையும் வெளியிட்டு வருகிறார். ஈழவாணியின் கவிதைத் தொகுப்புக்கு கவிஞர் மு.பொ. அவர்கள் முன்வைத்துள்ள விரிவான விமர்சனமொன்றையும் இந்நூலின் நுழைவாயிலில் காண முடிகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 60757).