11696 யாருக்கும் இல்லாத பாலை.

லதா (இயற்பெயர்: கே.கனகலதா). சென்னை 600041: க்ரியா, புதிய எண்2. பழைய எண் 25, 17ஆவது கிழக்குத் தெரு, திருவான்மியூர், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2016. (சென்னை 600017: சுதர்சன் கிராப்பிக்ஸ்).

95 பக்கம், விலை: இந்திய ரூபா 110., அளவு: 18×10.5 சமீ., ISBN: 978-93-82394-21-1.

இலங்கையில் பிறந்த கனகலதா, சிறுவயதிலேயே சிங்கப்பூரில் குடியேறியவர். 1990 முதல் சிங்கப்பூர் தேசிய நாளிதழான தமிழ் முரசுவில் துணை ஆசிரியராகப் பணியாற்றுகிறார். இந்திய சிங்கப்பூர் தொகுப்புகள் பலவற்றில் இவரது ஆக்க இலக்கியப் படைப்புகள் இடம்பெற்றுள்ளன. சமகாலத் தமிழ் இலக்கிய உலகில் ஒரு முக்கியமான ஆளுமை இவர். கவிஞர், சிறுகதை ஆசிரியர், பத்திரிகையாளர் என்ற வகையில் கடந்த கால்நூற்றாண்டு காலமாக இயங்கிவருபவர். தீவெளி (கவிதைகள், 2003), பாம்புக் காட்டில் ஒரு தாழை (கவிதைகள், 2004), நான் கொலை செய்யும் பெண்கள் (சிறுகதைகள், 2008), The Goddess in the Living Room (சிறுகதைகள், 2014) ஆகியவை இவரது பிற நூல்கள். ‘இத்தொகுப்பிலுள்ள பெரும்பாலான கவிதைகளில் பொருள்மயக்கின் அழகியலைக் காணமுடிகின்றது. கவிதைகளில் வெளிப்படையான பொருளைத் தேடும் வாசகர்களுக்கு இது ஒரு சவாலாக அமையலாம். லதாவின் கவிதைகள் வாசகரின் பங்குபற்றலையும் நுண்மதியையும் அதிகம் வேண்டி நிற்பவை. ஏமாற்றும் எளிமைக்குள் மர்மங்களைப் புதைத்துவைத்திருக்கும் கவிதைகள் இவை. மென் உணர்வின் சுகந்தமும், தனிமையின் நெருடலும், முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் வலியும், வன்முறைக்கு எதிரான குரலும் செறிவான படிமங்களின் ஊடாக இக்கவிதைகளில் வெளிப்படுகின்றன.’ (பின்னுரையில் எம்.ஏ.நுஃமான்). (பின்னட்டையில் ஐளுடீN: 978-93-82394-22-8 எனக் குறிக்கப்பட்டுள்ளது.)

ஏனைய பதிவுகள்