சோலைக்கிளி. கனடா: காலம், 16 Hampstead Court, Markam, ONT L3R 3S7, 1வது பதிப்பு, ஜுலை 2007. (சென்னை 600 005: மணி ஆப்செட், 112, பெல்ஸ் ரோடு, திருவல்லிக்கேணி).
215 பக்கம், விலை: இந்திய ரூபா 125.00, அளவு: 21.5×13 சமீ.
தன் தனித்துவமான கவிதைப் படிமங்களால் ஈழத்து இலக்கிய கவிஞர்களில் தனித்துவமான இடத்தைப் பெற்றிருப்பவர் சோலைக்கிளி. பூவுலகின் நாயகர்களாகவும் உரிமையாளர்களாகவும் மனிதர்களே விளங்கவேண்டும் என்ற மானுட முதன்மைவாதத்தை நுட்பமாகவும் நளினமாகவும் கவித்துவப் பெருக்கோடு கேள்விக்குள்ளாக்கும் நவீன கவி சோலைக்கிளி. கிழக்கிலங்கையின் வாழ்வும் வளமும் வலியும் அவரது கவிதா உலகத்திற்கு எம்மை வழிநடத்தும் இயற்கை வழிகளாகின்றன. நவீனத்துவமும் விசித்திரமும் நூதனமும் கவிதையும் கற்பனைக்கும் அப்பாற்பட்ட படிமங்களோடு இணைவது சோலைக்கிளியின் சிறப்பு. இன்றைய போராட்டம் மனித நாகரீகத்தை கேள்விக்குள்ளாக்குகின்ற சூழலைத் தன் நுட்பமான பார்வையால் இங்கு கவிதையாக்கியுள்ளார். இது இவரது எட்டாவது கவிதைத் தொகுதி. இவரது முன்னைய தொகுதிகளான எட்டாவது நரகம், காகம் கலைத்த கனவு, ஆணிவேர் அறுந்த நான், பாம்பு நரம்பு மனிதன், பனியில் மொழி எழுதி, என்ன செப்பங்கா நீ ஆகிய நூல்களிலிருந்து தேர்ந்தவையும் பிரசுரமாகாத 18 புதிய கவிதைகளுடாக இத்தொகதியில் இடம்பெற்றிருக்கின்றன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 42226).