11702 வாழ்த்தும் வணக்கமும்: கவிதைகள்.

வீணைமைந்தன் (இயற்பெயர்: கே.ரி.சண்முகராஜா). கனடா: வீணைக்கொடி வெளியீட்டகம், 425, Boulvard Hymam, Dollard-Des-Ormeaux (Quebec), H9B 1M1, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2015. (யாழ்ப்பாணம்: நோபிள் பிறின்ரேர்ஸ், இல. 817, ஆஸ்பத்திரி வீதி).

x, 11-88 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20×14 சமீ., ISBN: 978-955-42202-1-8.

அருள்மிகு திருமுருகன் பாடல்கள், மணவினை வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வணக்கம் செய்வோம் ஆகிய ஐந்து பிரிவுக்குள் அடக்கப்பெற்ற ஆசிரியரின் கவிதைகளின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. கனடாவில் வாழும் ஈழத்தவரான வீணைமைந்தன் அவ்வப்போது தேவை கருதிப் புனைந்த கவிதைகள் இவை. ஆன்மீகத் துறையிலும் கலைத் துறையிலும் பிற சமூகப் பணிகளிலும் ஈடுபடும் பெரியோரின் பாராட்டு நிகழ்வுகளில் பாடப்பெற்றவையும், திருமண வைபவங்களில் மனையறம் சிறக்கப் பாடப்பெற்ற  மங்கல வாழ்த்துக்களையும், தான் மதிக்கும் தலைவர்களின் மறைவையொட்டிய நிகழ்வுகளில் பாடப்பெற்ற இரங்கற் பாடல்களையும், ஆலயங்கள் மீதும் கடவுளர் மீதும் பாடப்பெற்ற பக்திப்பாடல்களையும் உள்ளடக்கிய இத்தொகுப்பு, பல்வேறு வகைப்பட்ட உணர்வுகளையும் சித்திரிக்கின்றன.

ஏனைய பதிவுகள்