நிலா தமிழின்தாசன். (இயற்பெயர்: மிக்கேல் அருள்மொழிராசா). மட்டக்களப்பு: எம்.அருள்மொழிராஜா, கல்லடி வீதி, களுதாவளை-01, 1வது பதிப்பு, 2014. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
xix, 68 பக்கம், விலை: ரூபா 225., அளவு: 18×12 சமீ., ISBN: 978-955-54839-1-9.
நிலா தமிழின்தாசன் திருக்கோணமலையின் நிலாவெளியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். மட்டக்களப்பு, களுதாவளையில் வாழ்ந்துவருபவர். 1976 முதல் கவிதைத் துறையில் ஈடுபட்டுவருகின்றார். கவிதை என்பது கவிஞனின் ஆத்மாவின் இராகம் என்பதை இக்கவிதைகளினூடு தெளிவாக வெளிப்படுத்துகின்றார். இத்தொகுப்பில் வாழ்வு விடியும், சமாதானம் செழிக்க வேண்டும், பாயட்டும் ஒளி வெள்ளம், முத்தமிடு நீயவளின் தாளை, பெண்ணென்ன சடப்பொருளா?, நிலவுகள் தேயலாமா?, வரமான தாய்ப்பாலே தரமாகும், காலை உயிர்ப்பழகு, தந்தை தெய்வம், இதுதான் உண்மை போன்ற தலைப்புகளில் வடிக்கப்பெற்ற ஆசிரியரின் 60 கவிதைகள் இடம்பெற்றுள்ளன.