ஷமீலா இஸ்மத். கொழும்பு 2: சஹ்லா பதிப்பகம், இல.68, கியூ வீதி, கொம்பனித் தெரு, 1வது பதிப்பு, டிசம்பர் 2015. (அச்சக விபரம் தரப்படவில்லை).
48 பக்கம், ஓவியங்கள், விலை: ரூபா 300., அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-955-7945-00-8.
இக்கவிதைத் தொகுதி மூன்று பிரிவுகளைக் கொண்டது. முதலாவதாக வரும் மணிக்கவிதைகள் என்ற பிரிவில் 28 கவிதைகள் அடங்கியுள்ளன. அடுத்துள்ள மக்கள் கவிதைகள் என்ற பிரிவில் 17 கவிதைகளும், மூன்றாவதாகவுள்ள மார்க்கக் கவிதைகள் என்ற பிரிவில் இஸ்லாமிய வாழ்வியல் தொடர்பான 15 கவிதைகளுமாக மொத்தம் 60 கவிதைகள் இந்நூலில் அடங்கியுள்ளன. இலக்கிய ஈடுபாடு என்பதற்கு அப்பால், சமூக அரசியல் நிலவரங்களைப் பற்றிய தமது கருத்துக்களையும் எழுத்தில் பதிக்கவேண்டும் என்ற நோக்கில் இக்கவிதைகளை ஆசிரியர் வழங்கியுள்ளார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 60904).