காத்தான்குடி பௌஸ். பாணந்துறை: காத்தான்குடி பௌஸ், 23/6, ஸைனி மன்ஸில், வத்தல்பொல, 1வது பதிப்பு, மார்ச் 2014. (பாணந்துறை: ஏ4ரு அச்சக இல்லம், 6/1, சுற்றுவட்ட வீதி, ஹேனமுல்லை, பாணந்துறை).
108 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 18×12.5 சமீ.
முஸ்லிம்களின் போர்க்காலக் கவிதைகள் பற்றிய பல்வேறு விபரங்களை, இத்தொகுப்பின் 47 கவிதைகளின் வாயிலாக ஆசிரியர் இந்நூலில் வழங்கியுள்ளார். தாயகத்திலும் உலக அரங்கிலும் நடைபெறும் யுத்த நிகழ்வுகளின் அநீதிகள், சமூக அநீதிகள், குறிப்பாக இஸ்லாமிய உலகில் நடைபெறும் போர்க்கால வன்முறைகள் அநீதிகள் பற்றி இக்கவிதைகள் பேசுகின்றன. தாய்க்குலமே என்ற முதல் கவிதை பாலஸ்தீனிய தாய்மார்களுக்கு எதிராக சியோனிஸ்டுகளின் அட்டூழியம் பற்றிச் சொல்கிறது. தொடரும் கவிதைகளான திருடர்கள், கடலை நோக்கி, காந்தியின் இறப்புக்கு கண்ணீர் விடும் மலர்த்தட்டு, சுவனத்து ஷ_ஹதாக்கள், வரலாற்றின் முகவரிகள், முஸ்லிம்களாய் நாங்கள், சுபஹின் அதான், ஆயிரமாம் ஆண்டின் அறிவுரை, எலக்ஷன் ஸ்பெஷல், காலக்கவிஞனின் பேனா, கல்லறை கானங்கள், அமெரிக்காவிலிருந்து ஆப்கான் வரை, செக் பொயின்ட், கணனி வேண்டும், முத்தையா முரளி, அறிவாய் கேள், மன அளவு மதிப்பீடு, பிட்டு வாங்கிய குட்டு, புஸ் புஷ் புஸ், நோக்கம் நுணுக்கம், நோன்புப் பெருநாள், கொக்கா கோலா, ஒற்றுமைப் பெருநாள், கரைச்சலோ கரைச்சல், இனந்தெரியாதோன் மலிந்த இலங்கை, முஸ்லிம்களின் இனப் பிரச்சினை, நவயுக நடப்புக்கள், அமைதிப் பெருநாள், ஊரைப் பார்ப்போமா?, சதாம் ஒரு வீரன், உம்மத்தின் கண்ணீர், எங்கள் ஷ_ஹதாக்களின் இனிய நாள், விடை தா பெருநாளே, எழுச்சிகொள்ளும் இன்பநாள், எதிர்காலம் இஸ்லாத்திற்கே, சமாதானப் பெருநாள், முடிவுகள், கிழக்கு மக்களை கிண்டல் செய்யாதீர், பாபரி மஸ்ஜித்தும்; பாரதத் தூக்கமும், அக்கினிக்குள் அல்குர் ஆன், கண்ணுறங்கலாம் கல்புறங்கலாமா? முஸ்லிம் எம் பீக்கள் முஸாபஹா செய்வார்களா? மழை முடிந்ததும் பொழுதும் விடிந்தது, மறக்க முடியாத மண்டேலா, எனத் தொடர்ந்து சமாதானத் தந்தை மண்டேலா என்ற இறுதிக் கவிதை வரையில் இக்கவிதைத் தொகுப்பில் பல்வேறு சமூக-அரசியல் கருத்துக்களையும் தனது ஆதங்கங்களையும் விரிந்த பார்வையுடன் இக்கவிஞர் பதிவுசெய்திருக்கிறார்.