தாஸிம் அஹமது. கொழும்பு 12: கவின் கமல், கமல் பிரதர்ஸ் பப்ளிகேஷன்ஸ், 75/45, அப்துல் ஹமீது வீதி, 1வது பதிப்பு, மே 1982. (அச்சக விபரம் தரப்படவில்லை).
(16), 32 பக்கம், விலை: ரூபா 57.50, அளவு: 18.5×13 சமீ.
1951இல் பிறந்த கல்முனைக் கவிஞர் தாஸிம் அஹமது அவர்களால் 1974ம் ஆண்டுகளில் எழுதப்பட்ட இக்கவிதைகள் தனித்தனிக் கருப்பொருள்களில் அமைந்தவை. வெள்ளையில் ஒரு புள்ளி, தியாகம், சவர்க்காரம், கண்ணாடி, நிறைகுடம், புத்தகப் பூச்சி, உணர்ச்சி, சிலை, பற்பேதம், நுளம்பு, இருள், முந்திரிக் கொட்டைகளே, முத்திரை, சாத்திரம்?, முதல் மாணாக்கர், வெளவால்களே, மரபுக் கவிதை/புதுக் கவிதை, சோதனை, பனி, விழிப்புணர்ச்சி, நப்பாசை, தீண்டா நெருப்பு, முனிவன், மாலை, சுயநலம் ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 21627).