11720 வெறிச்சோடும் மனங்கள்.

வெ.துஷ்யந்தன். அல்வாய்: ஜீவநதி வெளியீடு, கலை அகம், அல்வாய் வடமேற்கு, 1வது பதிப்பு, ஜுன் 2010. (பருத்தித்துறை: சதாபொன்ஸ் நிறுவனம்).

xvii, 47 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20.5×14.5 சமீ.

ஜீவநதியின் நான்காவது வெளியீடாக வெளிவந்துள்ள இந்நூல் வடமராட்சி, அல்வாயைச் சேர்ந்த இளங்கவிஞன் வெற்றிவேல் துஷ்யந்தனின் கன்னிப் படைப்பாகும். ஜீவநதி சஞ்சிகையின் துணை ஆசிரியரான இவர் 2005இல் வலம்புரி நாளிதழில் தன் முதலாவது கவிதை பிரசுரமாகக் கண்டவர். ‘நிதுசி’ என்ற புனைபெயரிலும் பின்னாளில் எழுதிவருபவர். 2005-2010 காலகட்டத்தில் தான் எழுதிய கவிதைகளில் தேர்ந்த 25 கவிதைகளை இந்நூலில் வழங்கியுள்ளார். நாம் வாழும் சூழல், போரின் வலி, காதல் ஆகியவற்றைப் பாடுபொருளாகக் கொண்டிருக்கிறார். அநீதிகளைக் கண்டு துடிக்கும் கோபாவேசம் இவரது கவிதைகளில் ஆங்காங்கே வெளிப்படுத்தப்படுகின்றது. நூலாசிரியர் வடமராட்சியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இசை நாடகக் கலையில் ஈடுபாடு கொண்டவர். இது இவரது முதலாவது நூல். கடந்த 5 ஆண்டுகளாக இவர் எழுதிய கவிதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. சமகால நிகழ்வுகள், காதல் உணர்வுகள், சமூக முரண்பாடுகள், போரின் எச்சங்கள் என்பன இக்கவிதைகளின் தொனிப் பொருள்களாகின்றன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 53361).

ஏனைய பதிவுகள்