11721 வேரின் பிரசவங்கள்.

சி.கிருஷ்ணபிரியன். ஹல்கிறனோயா: புதிய மலையகம், 50/9, இராகலை பசார், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2011. (கொழும்பு 11: World Vision Graphics).

(2), 126 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21×15 சமீ.

மலையக எழுச்சிப் போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்தி வாழ்ந்தவர் தோழர் சிவசூரிய நாராயணசாமி. நாராணயன் என்று நண்பர்களால் அறியப்பட்ட அவரது மறைவின் முதலாம் ஆண்டு 12.8.2011இல் நினைவுகூரப்பெற்றது. அத்தருணம் அவரது மூத்த மகனான கிருஷ்ணபிரியனின் கவிதைகளைத் தொகுத்து வெளியிடும் பணியில் நினைவுக்குழு செயற்பட்டுள்ளது. அவ்வகையில் இந்நூல் சிறப்பாக வெளிவந்துள்ளது. உள்நாட்டுப்போர் உக்கிரமாக நடந்துகொண்டிருந்த ஒரு காலகட்டத்தில் இக்கவிதைகள் எழுதப்பட்டுள்ளன. இவை கவிஞரின் உலக நோக்கு, போராட்ட அனுபவங்கள், சிறை அனுபவங்கள், போர்ச் சூழல் இவரிடம் ஏற்படுத்திய அதிர்வுகள், ஆதங்கங்கள், கோபங்கள் என்பவற்றின் வெளிப்பாடுகளாகவே பெரும்பாலும் அமைகின்றன. அரச ஒடுக்குமுறையின் காரணமாக இவர் 14.2.2007இல் கைதுசெய்யப்பட்டு அனுபவித்த சிறைக்கொடுமையின் இடையிலும்  இவர்கொண்ட தளராத மன உறுதி என்பவற்றையும்; நமக்குக் கூறுகின்றன. போராட்ட அழகியல் எவ்வாறானது என்பதை கவிஞர் கிருஷ்ணபிரியன் இக்கவிதைகளில் காட்டிச் சென்றுள்ளார்.

ஏனைய பதிவுகள்

17954 தமிழரின் தீராப் பிரச்சினையைத் தீர்த்துவைத்த சிறிமாவோ பண்டாரநாயக்க.

செ.அரியநாதன். கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 675  பி.டி.எஸ்.குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, 2011. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்). (6), 39 பக்கம், விலை: ரூபா 100.,