11722 வேருக்காய் விசும்பும் பூக்கள்: கவிதைத் தொகுப்பு.

அபிதவன். கோயமுத்தூர்: ஈழத் தோழர்கள், நேரு கலை மற்றும்அறிவியல் கல்லூரி, 1வது பதிப்பு, மார்ச் 2010. (கோயமத்தூர் 12: ஜெயின் அச்சகம், 5, 6-குறுக்கு வீதி, காந்திபுரம்).

88 பக்கம், விலை: இந்திய ரூபா 40., அளவு: 20×14 சமீ.

ஈழத்தமிழரின் சோகங்களையும் வலிகளையும் அழகாய் பிரதிபலித்த இந்நூலை எழுதியவர் ஈழ மாணவர் அபிதவன். கோவை நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இறுதியாண்டு பயின்று வருகிறார். நல்ல தமிழில் அழகாய் நேர்த்தியாகவும் தன் முதல் பதிவை பதித்துள்ள அபிதவனின் இக்கவிதை தொகுதியின் வெளியீட்டு விழா 14-3-2010 அன்று தமிழகத்தில், கோவை பெரியார் படிப்பகத்தில் நடைபெற்றது. கண்கெட்ட பிறகு, வலிது எது? கல்லறை தழுவும் கைகள், தீக்குச்சி அல்ல, இளைப்பாற மறுக்கும் இருப்பு, முள் விளைச்சல், வெற்றி வரை விழித்திரு, கார்த்திகை இரவுகள், காவியப் பெண்மைகள், மரணத்தை மறுதலிக்கும் மழலை, கேளாதிருங்கள்-வாளாதிருங்கள், வடக்கிற்கு வசந்தம், குவேனியின் குயில்களும் விஜயனின் காக்கைகளும், கனமானதொரு காத்திருப்பு, உரத்துச் சொல்லுங்கள், எல்லைகள் ஏன்? பிரிவையும் பிரிவோம் இனி, காகிதப் பூக்களின் கனமான காத்திருப்பு, நான் அழுது அம்மா சிரித்து, தோழமை சினந்த பொழுது, வீடுவந்து சேரும் இந்த வேளாண்மை, அசோக வனத்திலிருந்து அயோத்யாவுக்கு, எனக்கும் ஓர் காதலி, மனமெல்லாம் பொன்னானால் மண்ணெல்லாம் விண்ணாகும், தனிக்காரணத் தகுதி ஆகிய தலைப்புகளில் 25 கவிதைகள் இந்நூலில் இடம்பெறுகின்றன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 50296).

ஏனைய பதிவுகள்