எஸ்.முத்துக்குமாரன். மட்டக்களப்பு: எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம், 64 கதிர்காமர் வீதி, அமிர்தகழி, 1வது பதிப்பு, 2012. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி).
156 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-8715-90-1.
மட்டக்களப்பு துறைநீலாவணையில் 14/3/1939இல் பிறந்து கல்லடியை வதிவிடமாகக் கொண்டவர் கலாபூஷணம் சாமித்தம்பி முத்துக்குமாரன். பதிவாளர்நாயகம் திணைக்களத்தில் உதவிப் பதிவாளர் நாயகமாக பதவிவகித்து 1998இல் ஓய்வுபெற்றவர். மகாபாரதம், நளவெண்பா, பெரியபுராணம், திருவாதவூரடிகள் புராணம், கம்சரம்மானை, குறுந்தொகை போன்ற இலக்கியக் காட்சிகளிலிருந்து கருவெடுத்துப் பல வானொலி நாடகங்களை உருவாக்கித்தந்தவர். இவரது பக்தி இலக்கிய நாடகநூலாக இது வெளிவந்துள்ளது. இதிலுள்ள நான்கு நாடகங்களும் ஸ்ரீ மகா விஷ்ணுவையும் அவரது அவதாரமான ஸ்ரீ கிருஷ்ண பகவானையும் போற்றிப் பணியும் நாடகங்களாக அமைந்துள்ளன. தனது ஆழ்ந்த சமய அறிவு, நம்பிக்கைகளின் பயனாக பயனுள்ள பல சமயக் கருத்துக்களையும் தத்துவங்களையும் இந்த நாடகங்களில் பதிவுசெய்துள்ளார். எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் 75ஆவது வெளியீடாக இது அமைந்துள்ளது.