11734 விடியலின் கீதம்: நாடகங்கள்.

P.A.C.ஆனந்தராஜா. வவனியா: மனோ சாந்தி வெளியீடு, ஹொரவபொத்தான வீதி, இறம்பைக்குளம், 1வது பதிப்பு, டிசம்பர் 2012. (வவுனியா: அகரம் பிரின்டர்ஸ், 54, கந்தசாமி கோவில் வீதி).

70 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 150., அளவு: 20×14.5 சமீ., ISBN: 978-955-1862-01-5.

இந்நூலில் தேடுதல், விடியலின் கீதம், ஜெரூசல யாத்திரை, இதயத்தில் இடம், உயிர்த்த உள்ளங்கள் ஆகிய ஐந்து நாடகங்கள் இடம்பெற்றுள்ளன. இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியின் ஆசிரியராகவும் பலாலி மற்றும் பெரியவிளான் அரசினர் பாடசாலைகளில் அதிபராகவும் பணியாற்றிய நூலாசிரியர் P.A.C.ஆனந்தராஜா, விஞ்ஞானப் பட்டதாரியும், உளவளத்துணை பயிற்சியாளருமாவார். அரங்கியல் செயற்பாடுகளில் ஈடுபாடு காட்டிவந்த இவர் யாழ்ப்பாணம் சாந்தியகத்தின் பணிய்பாளராகவும் பணியாற்றியவர். உள்ளகப் புலப்பெயர்வின் காரணமாக வவனியாவில் குடியேறிய இவர் உளவளத்துணையிலும் அரங்கியல்துறையிலும் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றார். இந்நூலில் உள்ள நாடகங்களின் கதைக்கருக்கள் சமூகத்தில் உளவியல் மாற்றத்தை வேண்டி நிற்கின்றன. ‘தேடுதல்’ என்ற கதை, ஒரு மனிதனின் தேடுதல் வேட்கையின் அவசியத்தை சிறுவர்களிடையே பதியம் வைப்பதாக அமைகின்றது. ’விடியலின் கீதம்’, விடியலின் கீதத்தைப் பாடும் பாவத்திலிருந்து  மன்னிக்கப்பெற்ற பெண் தன் இயேசு நாயகரைத் தேடியலையும் தாகத்தைப் பிரதிபலிக்கின்றது. விடியலின் கீதம் இழப்பில் மூழ்கிய மரிய மக்தலேனா அன்பின் களிப்பில் பாடியாடுவதைக் காணலாம். ‘ஜெரூசல யாத்திரை’ இயேசுவின் பிறப்பின் பொருளைப் புரிந்துகொள்ள எடுக்கப்படும் பயணமாகும். நத்தார் விழாவும் யேசுவின் பிறப்பும் வியாபார விழாவாகியுள்ள இன்றைய நிலையில் உண்மையான அர்த்தத்தை அப்பாவும் பிள்ளைகளும் கண்டறிவதாக முடிவுறுகின்றது. ‘இதயத்தில் இடம்’ என்ற நாடகம் இதயத்தில் அன்புக்கு இடமளிக்காமல் பணத்தாசை பிடித்தலையும் ஒரு விடுதியாளரையும் அவரிடம் பணியாற்றும் ஏழைப் பணியாளனையும் சுற்றிப் பின்னப்பட்ட கதையாகும். ‘உயிர்த்த உள்ளங்கள்’ என்ற நாடகக்கதை கிறீஸ்துவின் உயிர்ப்பு விழாவில் (ஈஸ்டர்) சிறுபிள்ளைத் தனமாகச் சண்டையிடும் பெற்றோர்களையும் அவர்களுக்கு மன்னிப்பைத் தேடிப் பாடம் புகட்டும் சின்னஞ்சிறிசுகளையும் சுற்றிப் பின்னப்பட்டது.

ஏனைய பதிவுகள்

15478 இதயத்தின் ஓசைகள்.

ஸக்கியா ஸித்தீக் பரீத். கொழும்பு 10: முஸ்லிம் கல்வி முன்னேற்றச் சங்கம், ஸ்ரீ சங்கராஜ மாவத்தை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2010. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி). 58 பக்கம்,