ஜெக்கியா ஜுனைதீன். றாகமை: ஷாமிலா பதிப்பகம், 216/10-B, Mangala Mawatte, Magammana, Pulinathalarama Road,1வது பதிப்பு, 2005. (கொழும்பு 13: விக்ரம் பிரின்டர்ஸ்).
xx, 36 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 21.5×15 சமீ., ISBN: 955-96265-8-2.
போலியோ நோயினால் அங்கவீனமான ‘காமில்’ என்ற சிறுவனின் கதாபாத்திரத்தையும், அச்சக உரிமையாளரான அமரதுங்கவின் கண்பார்வையற்ற மகளான ‘மாலனி’ என்ற பாத்திரத்தையும் சுற்றிப் பின்னப்பட்ட கதையம்சம் கொண்ட நாடகம். இலங்கைச் சமூகத்தில் மாற்றுத் திறனாளிகளையிட்ட விழிப்புணர்வினை இந்நாடகம் ஏற்படுத்து கின்றது. முன்னர் 1989இல் இவர் எழுதிய ‘ஷாமிலாவின் இதய ராகம்’ 2001 வரை நான்கு பதிப்புகளைக் கண்டது. இவரது நாடக நூல்களான தீர்வும் தீர்ப்பும், எனது வானொலி நாடகங்கள் ஆகியவை பெரிதும் பேசப்பட்டவை.