சிவங் கருணாலய பாண்டியனார். தமிழ்நாடு: சா.பழ.மு.சா.பனையப்பச் செட்டியார், நெற்குப்பை, 1வது பதிப்பு, 1950. (தமிழ்நாடு: கல்யாண் அச்சுக்கூடம்,திருச்சிராப்பள்ளி).
(6), 96 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12.5 சமீ.
தலைஏழு வள்ளல்களுள் ஒருவனும் ஒளவையார், பரணர், பெரஞ்சித்திரனார், பொன்முடியார் முதலிய நல்லிசைப் புலவர்கள் பலரால் பாடப்பெற்ற பாட்டுடைத் தலைவனும் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவனுமாகிய அதியமானொடு மானஞ்சியென வழங்கும் ‘எழினி” என்பவனின் வரலாற்றை விளக்கிப் புனையப்பெற்ற கட்டுரைச் செய்யுள் இதுவாகும். எழினி மரபு, எழினி மாண்பு, எழினியிற் கிழத்தியார், எழினி சேயெழினி என நான்கு அத்தியாயங்களில் இந்நூல் வடிக்கப்பெற்றுள்ளது. விஜய ஆண்டு ஆனித்திங்கள் 28ஆம் நாள் (12.07.1953) அன்று பனையப்பன்-சரசுவதி திருமண அன்பளிப்பாக விருந்தினருக்கு வழங்கப்படட நூல் இது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2661).