மருத மைந்தன் (இயற்பெயர்: MS.S.ஹமீத்). காத்தான்குடி: நவ இலக்கிய மன்றம், 1வது பதிப்பு, 1996. (சென்னை 600001: மில்லத் பிரிண்டர்ஸ், 16, அப்பு மேஸ்திரி தெரு).
95 பக்கம், விலை: ரூபா 50., அளவு: 17.5×12 சமீ.
காத்தான்குடிக் கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர் மருத மைந்தன். இவரது இஸ்லாமிய வீரக் காதல் காவியமாக ‘சங்கமம்’ அமைகின்றது. துருக்கிநாட்டு சுல்தான் அலப் அர்ஸலாவின் போர் நிகழ்ச்சி இக்காவியத்தின் களமாகின்றது. பாஹிம்கான், பிலோமினா, ஜேகப், மார்க்கிரட் போன்ற கற்பனைப் பாத்திரங்கள் இக்காவியத்துக்கு மெருகூட்டுகின்றன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 28154).