வி.ஜெகநாதன்; (புனைபெயர்: நக்கீரன்). உரும்பிராய்: வி.ஜெகநாதன்;, 1வது பதிப்பு, 2016. (யாழ்ப்பாணம்: ஜெயஸ்ரீ அச்சகம், 34, பிரவுண் வீதி).
xix, 43 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 20.5×12.5 சமீ., ISBN: 978-955-43879-0-4.
கவிஞர் வி.ஜெகநாதன் எப்போதும் ஒடுக்கப்பட்டவர்கள், நலிவுற்றவர்கள், வழியவர்களுக்காகக் குரல்கொடுக்கும் சமூகப்போராளி. தனது சமூக அனுபவங்களை கவிதையாகவும் கட்டுரையாகவும், இசைப்பாடலாகவும், நாடகமாகவும் வெளிக் கொண்டுவருவதில் ஆற்றல் பெற்றவர். ஆதிக்க சக்திகளால் நாசூக்காக ஒதுக்கப்படுகின்ற, அவர்கள் அறியாததுபோல பாசாங்கு செய்யப்படுகின்ற, ஊடகங்களினால் நிரந்தர இருட்டடிப்புச் செய்யப்படுகின்ற திண்டாமையின் கனதியை அவர் தமது கவிநடையில் காவியமாக்கித் தந்துள்ளார். இந்தக் குறுங்காவியம் கட்சி அரசியல் சார்ந்ததல்ல. சமூக அரசியல், பொருளாதார, பண்பாடு, சாதியம் என அனைத்தையும் சார்ந்தது. இந்நூல் வடக்கு மாகாண அரசின் கல்வி, பண்பாட்டுத்துறை, விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் நிதி அனுசரணையுடன் வெளியிடப்பட்டுள்ளது.