11754 தமிழழகி: நான்காவது காண்டம் (செய்யுளும் குறிப்புகளும்).

க.தா.செல்வராஜகோபால் (புனைபெயர்: ஈழத்துப் பூராடனார்). எட்வேட் இதயச்சந்திரா (பதிப்பாசிரியர்). கனடா L5V 1S6:  Tamil Cinema Encyclopaedia Publications, ஜீவா பதிப்பகம், இல. 3, 1292 Sherwood Mills Bloved, மிஸிஸாகா, ஒன்ராரியோ, 1வது பதிப்பு, ஜனவரி 2006. (கனடா L5C 2T7: ரிப்ளெக்ஸ் அச்சகம், 215 ஸ்ரெயின்ரன் டிரைவ், மிஸிஸாகா, ஒன்ராரியோ).

xiv, பக்கம் 1235-1500, விலை: கனேடிய டொலர் 60., அளவு: 22×14.5 சமீ.

ஈழத்துப் பூராடனார் என அழைக்கப்படும் க. தா. செல்வராசகோபால் (13 டிசம்பர், 1928 – 21 டிசம்பர் 2010) ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர். இருநூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியும் பதிப்பித்தும் உள்ளார். புலம் பெயர்ந்து கனடாவில் வாழ்ந்தவர். பன்னிரண்டாயிரம் பாடல்கள், 2070 பக்கங்கள், ஒன்பது காண்டங்கள் கொண்ட காவியம் படைக்கவேண்டும், அது 81 படலங்களாகவும், 567 அங்கங்களாகவும் விளங்கவேண்டும் என்ற திட்டமிடலுடன் உருவான தமிழழகி காப்பியத்தின் நான்காம் காண்டம் இந்த நூலாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 39002).

ஏனைய பதிவுகள்

15942 எழுதி முடியாக் கதை 1954-2018.

கை.சரவணன், ந.மயூரரூபன் (தொகுப்பாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: எழு வெளியீட்டகம், எழு கலை இலக்கியப் பேரவை, 1வது பதிப்பு, நவம்பர் 2018. (சுன்னாகம்: முத்து பிரின்டர்ஸ்). 204 பக்கம், புகைப்படங்கள்,  விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19.5×12.5 சமீ.