11755 பாரத அம்மானை.

சா.இ.கமலநாதன். (பதிப்பாசிரியர்). கொழும்பு 4: இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், 248, 1/1, காலி வீதி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2002. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).

(2), L, 356 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 22.5×14.5 சமீ.

இலக்கியக் கலாநிதி சா.இ.கமலநாதன் அவர்கள் மட்டக்களப்பின் இலக்கியப் பாரம்பரியத்தை வெளிப்படுத்தி நிற்கும் மகாபாரதக் கதையான ‘பாரத அம்மானை’ ஏட்டுப் பிரதிகளைக் கண்டெடுத்து அதனை ஆய்வு செய்து நூல்வடிவில் உருவாக்கித் தந்துள்ளார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 28987).

ஏனைய பதிவுகள்