உமர் கையாம் (மூலம்), அப்துல் காதர் லெப்பை (தமிழாக்கம்). பண்டாரவளை: மணிக்குரல் பதிப்பகம், 6, வெலிமடை வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 1965. (பதுளை: மொடர்ன் அச்சகம், 146, லோவர் வீதி).
86 பக்கம், விலை: ரூபா 65., அளவு: 18.5×13 சமீ.
புகழ்பெற்ற தத்துவ ஞானியும் கணித மேதையும் கவிஞருமான பாரசீகப் பெரும்புலவர் உமர்கையாம் இயற்றிய ஆழ்ந்த தத்துவ நூல் ருபாய்யாத். பதினோறாம் நூற்றாண்டில் வாழ்ந்த பாரசீகக் கவிஞரான உமர்கையாம், ஈரான் நாட்டை ஆண்ட மாலிக்ஷா என்ற சுல்தானின் அரசவை அறிஞராகப் பணிபுரிந்தவர். இவர் ஒரு ஜோதிடருமாவார். ஒரு ஆண்டிற்கு 365 நாட்கள் என்று அறிவித்த கணித மேதை இவரேயென்றும் கூறுவர். அவரது அற்புத நூலே இந்த ருபாய்யாத். இந்நூலை தமிழாக்கம் செய்த கவிஞர் அப்துல் காதர் லெப்பை (1913-1984) கிழக்கிலங்கையின் காத்தான்குடிக் கிராமத்தைத் தாயகமாகக் கொண்டவர். சிறந்த சிந்தனையாளரும், கவிஞருமான இவர், ஒரு ஆசிரியராகப் பணியாற்றியவர். இலங்கையின் கல்வித்துறையினரால் பெரிதும் போற்றப்பட்டவர். இது இவருக்கு சாகித்திய மண்டலப் பரிசினைப் பெற்றுத்தந்த நூலாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 19777).