ஷோபாசக்தி. சென்னை 600 005: கருப்புப் பிரதிகள், பி.55, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்சு சாலை, 4வது பதிப்பு, பெப்ரவரி 2016, 1வது பதிப்பு, மார்ச் 2009. (சென்னை600 005: ஜோதி என்டர்பிரைஸஸ்).
152 பக்கம், விலை: இந்திய ரூபா 130., அளவு: 21.5×14 சமீ.
எம்.ஜி.ஆர். கொலை வழக்கு: சிறுகதைகள்.
ஷோபாசக்தி. சென்னை 600 005: கருப்புப் பிரதிகள், பி.55, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்சு சாலை, 3வது பதிப்பு, டிசம்பர் 2021, 1வது பதிப்பு, மார்ச் 2009, 2வது பதிப்பு, பெப்ரவரி 2016. (சென்னை600 005: ஜோதி என்டர்பிரைஸஸ்).
152 பக்கம், விலை: இந்திய ரூபா 150., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-81-929715-4-4.
ஷோபாசக்கி எழுதிப் பிரசுரமான பத்துக் கதைகள் இத்தொகுப்பில் அடங்கியுள்ளன. Cross Fire, இயக்கம், குண்டு டயானா, எம்.ஜி.ஆர். கொலைவழக்கு, பரபாஸ், ரம்ழான், தமிழ், வெள்ளிக்கிழமை, திரு.முடுலிங்க, விலங்குப் பண்ணை ஆகிய தலைப்புகளில் வெளிவந்த இக்கதைகள் காலம், உயிர்மை, தீராநதி, எதுவரை, புதுவிசை, அநிச்ச, இன்மை, பவளமல்லி, தமிழினி ஆகிய இதழ்களில் முன்னதாக வெளிவந்தன. கால் நூற்றாண்டிற்கும் மேலாக நிகழ்த்தப்பட்டு வரும் இனப்படுகொலைகளும் இடையுறாப் போரும் மனித உளவியல் மீது படிமங்களாக, இன்னொரு மனித உயிரை நீக்கி இன்பம் கொள்கிற பேரவலங்களாக மாறிவிடுகிற பிரச்சினைப்பாடுகளை, மனப்பிறழ்வுகளை தந்துவிடக்கூடிய அனுபவங்களைப் படைப்பின் கண்ணிகளாக மாற்றி தப்பித்துச் செல்பவை ஷோபாசக்தியின் இச்சிறுகதைகள். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 61432).