இ.சு.முரளிதரன். அல்வாய்: ஜீவநதி வெளியீடு, கலை அகம், அல்வாய் வடமேற்கு, 1வது பதிப்பு, சித்திரை 2014. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ், முருகேசர் ஒழுங்கை, நல்லூர்).
(4), viii, 68 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-4676-15-2.
இது ஆசிரியரின் முதலாவது சிறுகதைத் தொகுதி. பின்னவீனத்துவப் பாணி, தொன்மப் பயன்பாடு, யதார்த்த நோக்கு ஆகிய மூன்று வகையான முறைகளிலும் இச்சிறுகதைகள் எழுதப்பட்டுள்ளன. 33ஆவது ஜீவநதி பிரசுரமாக வெளிவந்துள்ளது. இதில் துன்பியல் நாயகன், மீசை முறுக்கிய மின்மினிகள், கடவுளின் கைபேசி எண், கவந்தம், பாடக்குறிப்பு, கழிவொயில், AB+ குருதியும் நீல நரியும், சிறுத்தொண்டரின் சேவைநலன் பாராட்டு, டுள்ளா, கைமாற்றத் தகாத காசோலை, பகிர்வு, வேண்டுதல் ஆகிய 12 சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பிடித்துள்ளன. கதைகளின் தலைப்புக்கள் ஆழ்ந்த அர்த்தபுஷ்டியுடன் கூடியதாக தேர்ந்து வழங்கப்பட்டுள்ளன. பல சிறுகதைகள் தொன்மங்களை அடியொற்றியனவாக உருவாகியுள்ளன. துன்பியல் நாயகன், கவந்தம், கைமாற்றத்தகாத காசோலை, பகிர்வு என்பன உதாரணங்களாகும். இவற்றுள் முதல் மூன்று சிறுகதைகளும் ஈழத்தின் சமகால அரசியல் நிகழ்வுகளைச் சுவையோடும் ஈர்ப்போடும் பேசுகின்றன. பகிர்வு- ஈழத்து முரண்பாட்டுச் சிக்கலை அனைவரும் அறிந்த விநாயகர்-முருகன் மாம்பழக் கதையோடு மிக இயல்பாக இணைத்திருப்பதை அவதானிக்கமுடிகின்றது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 236672).