ஏ.நஸ்புள்ளாஹ். கிண்ணியா 03, பேனா பப்ளிக்கேஷன்ஸ், பைசல் நகர், 1வது பதிப்பு, 2013. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி).
130 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-0932-07-8.
அழகிய பேச்சுவழக்கில், சிறந்த கள அம்சங்கள் பொருந்த உருவாக்கப்பட்டுள்ள பதின்மூன்று சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. அடையாளமும் அங்கீகாரமும், முரண்பாடுகளின் சாபம் பற்றிய விமர்சனப் பார்வை, காவி நரகத்தின் கதைகள், நஸ்புள்ளாஹ்வின் கதைகளில் நான், நான் நேசிக்கின்ற சகோதர சமூகத்திற்காக ஆகிய உரைகளைத் தொடர்ந்து புத்தன் பிறந்த பூமியில், இவர்களை நடைபாதையாக உபயோகிக்காதீர்கள், முரண்களின் சாபம், கன்னத்தில் அறையும் கதை, நிலைகுலைவு, மனிதம், ஆறு கண்களால் எழுதிய மூன்று கடிதங்கள், இப்படிக்கு பூங்காற்று, காவி நரகம், வேரறுந்த விலாசங்கள், விதவைத் தேசம், சுதா சுங்கன் மீன் போல அழகு, ஓர் எழுத்தாளனின் கதை ஆகிய 13 சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. புத்தன் பிறந்த பூமியில், முரண்களின் சாபம், நிலைகுலைவு, வேரறுந்த விலாசங்கள் உள்ளிட்ட எட்டுக் கதைகள் உள்நாட்டு யுத்தத்தை மையமாகவைத்து எழுதப்பட்டவையாகவும், ஏனைய ஐந்து கதைகளும் தன் சமூகம் சார்ந்த பல்வேறு பிற சம்பவங்களை மையமாக வைத்துப் பின்னப்பட்டவையாகவும் உள்ளன. தலைப்புக் கதையான காவி நரகம்-நிறைமாதக் கர்ப்பிணியான விதவைப்பெண் குகநாயகியும் அவளது தாயும் யுத்தம் நிலவும் பிரதேசத்தில் வாழும்போது படும் அவஸ்தைகளை விபரிக்கின்றது. கதாசிரியர் கவிஞராகவும் இருப்பதால், சிறுகதைகளில் இடையிடையே கவிதைநடை ஊடுருவியிருப்பதையும் அவதானிக்க முடிகின்றது. கவிஞர் ஏ.நஸ்புள்ளாஹ் கிழக்கிலங்கையில் கிண்ணியாவில் பிறந்தவர். க.பொ.த.உயர்தரக் கல்விகற்ற இவர் நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் மானி வாசிப்பாளராகக் கடமையாற்றுகிறார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 61296).